சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா கட்சிக்கு அங்கீகாரம்

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

Updated On :2 ஏப்ரல் 2013, 5:55 am

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் அக்கட்சி பதிவு செய்யப்பட்டு, தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பொன்சேகா கூறியதாவது: எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது புதிய பாதைக்கான தொடக்கம் என்றார்.

ஜனநாயக கட்சியை பதிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. முன்னதாக பொன்சேகா கட்சியை பதிவு செய்ய அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தில் பொன்சேகா புகார் செய்திருந்தார். பின்னர் தற்போதைய தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியாவிடம் மனு அளித்தார். அது ஏற்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற பெயரில் பொன்சேகா அதிபர் ராஜபட்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் கடந்த 2012 மே மாதம் விடுதலை செய்யப்பட்டார்.