ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியது: இந்திய ஆதரவுடன் அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பின்விளைவைத் தான் ஏற்படுத்தும். இலங்கை மேற்கொண்ட நல்ல செயல்கள் குறித்து எதுவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை அமைச்சரவையின் செய்தித்தொடர்பாளர் கேஹிலியா ரம்புவெல்லா கூறியதாவது:
அமெரிக்கா தீர்மானத்தில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உள்நாட்டு அரசியல் காரணங்களால் இந்தியா இத்தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
இந்தியாவுடனான நல்லுறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்நாட்டு மத்திய அமைச்சர் சிதம்பரமும் இலங்கையை எதிரி நாடாக கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முற்றிலும் இலங்கை அரசு நிராகரிக்கிறது. போருக்கு பிந்தைய காலகட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கைக்கு எதிராக தடைகளோ, தலைவர்கள் பயணத்துக்கு தடையோ விதிக்கப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வரும் 2016-ம் ஆண்டு வரை இலங்கை அரசுக்கு காலஅவகாசம் உள்ளது என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

