சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மலாவி அதிபருக்கு எதிராக சதி: 2 முன்னாள் அமைச்சர்கள் கைது

மலாவியின் தற்போதைய அதிபர் ஜோய்ஸ் பாண்டாவை பதவிக்கு வரவிடாமல் தடுக்க சதி செய்ததாக, 2 முன்னாள்

Updated On :12 மார்ச் 2013, 8:48 am

மலாவியின் தற்போதைய அதிபர் ஜோய்ஸ் பாண்டாவை பதவிக்கு வரவிடாமல் தடுக்க சதி செய்ததாக, 2 முன்னாள் அமைச்சர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான மலாவியின் அதிபராக இருந்த பிங்குவா முதாரிக்கா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். அவர் உயிரிழந்தது உடனடியாக மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

அடுத்த அதிபர் யார் என்பது குறித்து ரகசிய ஆலோசனை நடந்தது. அப்போதைய துணை அதிபர் ஜோய்ஸ் பாண்டா அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருந்தது. இதைத் தடுக்க, அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஹென்றி மூஸô, வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கோண்ட்வானி நன்கும்வா உள்ளிட்டோர் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பாண்டா அதிபராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அதிபராகப் பொறுப்பேற்க விடாமல் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூஸô மற்றும் கோண்ட்வானி இருவரும் போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"இக் கைது நடவடிக்கை எனக்கு எதிராகச் செயல்பட்டதால். நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று அதிபர் பாண்டா தெரிவித்துள்ளார்.