சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

"மனித உரிமை மீறல்களை இலங்கை விசாரிக்க வேண்டும்'

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை

Updated On :2 மார்ச் 2013, 6:16 am

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு அரசு பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தேதி வரை போர் குற்றங்கள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ளவில்லை.

இது குறித்து, பாரபட்சமற்ற விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் தெரிவித்தார்.

இலங்கையில், போர் நடந்தபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிக்கையை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.