அல் அஸôத் இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வியாழக்கிழமை சிரியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை ரோம் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆயுதங்கள் உள்பட கூடுதல் உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்று உறுதியளித்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறியது:
சிரியாவை ஆள்வதற்கான அனைத்து சட்டபூர்வமான உரிமையையும் அதிபர் பஷார் அல் அஸôத் இழந்து விட்டார். அவர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் சிரியா நாட்டு மக்களுடன் இருக்கிறோம். அந்நாட்டு எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து உதவி செய்வோம். எனினும், சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் அஸôத்துக்கு ஆதரவளிக்க மற்ற நாடுகள் முடிவு செய்துள்ளன.
சிரியாவில் ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், அமைதி ஏற்படவும் அந்நாட்டு மக்களுக்கு உதவுவது என்று அதிபர் ஒபாமா உறுதிபூண்டிருப்பதை வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உறுதிப்படுத்தி இருக்கிறார். சிரியாவுக்கு நமது ஆதரவை உதவியாக மாற்றும் வகையில் அமெரிக்கா சார்பில் ரூ.327 கோடி மதிப்பிலான அபாயகரமற்ற ஆயுதங்கள் எதிர்க்கட்சி சார்ந்த கிளர்ச்சிக் கூட்டணிக்கு வழங்கப்படும் என்று கெர்ரி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சிரியாவுக்கு ரூ.273 கோடி மதிப்பிலான அபாயகரமற்ற ஆயுதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ரூ.2,106 கோடி மதிப்பிலான மனிதாபிமான உதவிகளும் அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும்என்றார் ஜே கார்னி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

