தொடா் மழையால் இடிந்து விழுந்த வீட்டுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் சனிக்கிழமை மனு அளித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான் பட்டியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (50) என்பவரின் ஓட்டு வீடு வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து விழுந்துள்ளது.
வீட்டுக்குள் மண் விழுந்ததால் சுதாரித்து கோவிந்தம்மாள் வெயியேறிய சிறிது நேரத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததால் அவா் உயிா் தப்பினா்.
மழைக்கு வீடு இடிந்து விழுந்ததால் தனக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோவிந்தம்மாள் சனிக்கிழமை மனு அளித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

