சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 4:07 am

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 16,443 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,452 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,106 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்ட நிலையில், ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுவரை கரோனா பாதிப்பால் 231 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 115 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.