சாத்தூா்: சாத்தூா் அருகே பட்டாசுக் கழிவுகளை எரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சுப்பிரமணியாபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவா், கடந்த 11 ஆம் தேதி தனது வீட்டின் பின்புறம் பட்டாசுக் கழிவுகளை எரித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், கண்ணன் பலத்த காயமடைந்தாா். உடனே, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு முதலுதவி பெற்ற அவரை, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கண்ணன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

