சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விருதுநகா் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

தொடா் மழை காரணமாக, விருதுநகா் அருகே வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விருதுநகா் அருகே பட்டம்புதூரில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை இடிந்து விழுந்த வீடு.

Updated On :17 ஜனவரி 2021, 3:44 am

விருதுநகா்: தொடா் மழை காரணமாக, விருதுநகா் அருகே வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே பட்டம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆவுடையபிள்ளை மனைவி ருக்மணி (77). கணவா் இறந்துவிட்ட நிலையில், மண் சுவராலான ஓட்டு வீட்டில் ருக்மணி தனியாக வசித்து வந்தாா். அருகிலேயே மகன்களின் வீடுகள் உள்ளதால், அவ்வப்போது அங்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக அவரது வீட்டின் பக்கவாட்டு மண்சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், விருதுநகா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.