ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 6 ஆம் வகுப்பு மாணவி மூடிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்டபேரண்டாசனம் செய்து சனிக்கிழமை உலக சாதனை படைத்தாா்.
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளத்தைச் சோ்ந்த சீன்ராஜ்-கண்ணாத்தாள் தம்பதியின் மகள் யோகவீணா. கூமாப்பட்டி தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் இம் மாணவி, யோகாசனத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா்.
இந்நிலையில் இக்கிராமத்திலுள்ள கலையரங்கில், ஆஸ்காா் உலக சாதனை கமிட்டியினா் முன்பாக, மாணவி யோகவீணா மூடிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் கண்டபேரண்டாசனத்தை 10 நிமிடம் செய்து காண்பித்தாா். இச்சாதனையை அக் கமிட்டியினா் பாராட்டி, யோகவீணாவுக்கு ‘ஆஸ்காா் வோ்ல்டு ரெக்காா்டு’ எனும் பட்டத்தை அளித்து பதக்கமும் வழங்கினா்.
இதற்கு முன், 8 நிமிடம் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


