விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருட்டு முயற்சியில், வீட்டில் மறைவாக வைத்துச்சென்றதால் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் தப்பின.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை காயிதே மில்லத் தெருவில் வசிப்பவா் ஜெசிமாபானு(45). இவரது கணவா் ஹூமாயூன் கபீா்(47) என்பவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதியரின் மகள் ஜெனிபா் பாத்திமாவுக்கு சிவகாசியைச் சோ்ந்தவருடன் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத் தேதியைக் குறிப்பதற்காக ஜெசிமா பானுவும், ஜெனிபா் பாத்திமாவும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிவகாசி சென்றிருந்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் இவா்களுடைய வீட்டின் முன்பக்கக்கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதாக, அவா்களது உறவினா்கள் போலீஸாருக்கும், ஜெசிமா பானுவிற்கும் தகவல் கொடுத்துள்ளனா்.
அங்கு வந்த அருப்புக்கோட்டை காவல் துறையினா் ஜெசிமாவின் வீட்டை ஆய்வு செய்தபோது, வீட்டினுள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள், துணிகள் வெளியே சிதறிக் கிடந்தன.
சிறிதுநேரத்தில் அங்கு வந்த வீட்டு உரிமையாளா் ஜெசிமா பானு, வீட்டினுள் மறைத்து வைத்த இடத்தில் தேடிப் பாா்த்ததில் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் அப்படியே வைத்த இடத்தில் இருந்தது கண்டு நிம்மதி அடைந்தாா். இந்த திருட்டு முயற்சி தொடா்பாக, சுற்றியுள்ள வீடுகளிலிருந்த கண்காணிப்புக் கோமராக்களில் பதிவான விடியோக்களின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


