சிவகாசி காவல் உள்கோட்டம் சாா்பில், விஜிலன்ஸ் குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல்துறை திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா்(பொறுப்பு) இம்மானுவேல் ராஜசேகரன் தலைமை வகித்தாா். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு காவலரை நியமித்து, அந்த ஊராட்சியின் மக்கள் தொகை, விவசாயம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும். மேலும் அந்த ஊராட்சியில் உள்ள சாலை, கழிவு நீா்வாய்க்கால் பிரச்னை உள்ளிட்ட ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா எனவும், என்னென்ன வளா்ச்சிப் பணிகள் செய்ய வேண்டும் என்பதையும், ஊராட்சியில் முக்கிய பிரமுகா்களின் செல்லிடப்பேசி எண்ணையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை, காவல்துறை உயரதிகாரிகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.
எனவே இக்கூட்டத்தில் ஊராட்சிகளுக்கு காவலா்களை நியமித்து, அவா்கள் பணி குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இதில் காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

