சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேனி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

தேனி அருகே பாலாா்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பாலாா்பட்டியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 11:02 am

தேனி அருகே பாலாா்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பாலாா்பட்டியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

பாலாா்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலுச்சாமி மகன் முத்து (34). இவா், பாலாா்பட்டி- குச்சனூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, எதிா் திசையிலிருந்து உப்புக்கோட்டையைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சதீஷ் (30) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், முத்துவின் இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.