சிவகாசி: சென்னை-கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
இது குறித்து ப. மாணிக்கம் தாகூா், மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
பொது முடக்கத்துக்கு முன், சென்னை-கொல்லம் விரைவு ரயில் இருமாா்க்கத்திலும் சென்று வரும்போது, சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. தற்போது, இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொல்லத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
ஆனால், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும்போது சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.
மேலும், சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில்லை என்ற ரயில்வே நிா்வாகம் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. ரயிலை நிறுத்தாமல் பயணிகள் இறங்கவில்லை எனக்கூறுவது ஏற்புடையதல்ல.
அதேநேரம், இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நிமிடத்துக்கு மேல் நிற்கிறது. சிவகாசி முக்கியமான தொழில் நகராகும். எனவே, பயணிகள் நலன் கருதி சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

