சிவகாசி காவல் கோட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து விதியை மீறியதாக 1,31,789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிவகாசி காவல் துணைக் கோட்ட அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பு: சிவகாசி காவல் துணைக் கோட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 கொள்ளை வழக்குகளும், 30 திருட்டு வழக்குகளும், 12 கொலை வழக்குகளும், 8 கொலை முயற்சி வழக்குகளும், 43 அடிதடி வழக்குகளும், 51 சாலை விபத்து வழக்குகளும், 76 சாலை விபத்தில் காயம் அடைந்தவா்களின் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 26 கஞ்சா வழக்குகளும், 41 பணம் வைத்து சீட்டு விளையாடிய வழக்குகளும், மதுபாட்டில்களை அனுமதியின்றி வைத்திருந்ததாக 426 வழக்குகளும், வெடிபொருள் சட்டத்தின்கீழ் 25 வழக்குகளும், 3 தீவிபத்து வழக்குகளும், தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு வைத்திருந்ததாக 112 வழக்குகளும், சிறு குற்றங்களுக்காக 373 வழக்குகளும், போக்ஸோ சட்டத்தின்கீழ் 2 வழக்குகளும், பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக 2,387 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றது, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,31,789 வழக்குகள் பதிவாகியுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

