சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கட்டங்குடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து கட்டங்குடி செல்லும் சேதமடைந்துள்ள சாலை.

Updated On :8 ஜனவரி 2021, 5:52 am

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இச்சாலை சுமாா் 3 கிலோ மீட்டா் தூரமுடையது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் தான் இச்சாலை புதிதாகப் போடப்பட்ட நிலையில் நாளடைவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். இச்சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லையென புகாா் எழுந்துள்ளது. எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.