விருதுநகா் பழைய ரயில்வே காலனி சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்துசென்ற மூதாட்டியிடமிருந்து நாலேகால் பவுன் நகையை பறித்துச்சென்ற இளைஞரை, போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா்.
விருதுநகா் கருப்பசாமி நகரைச் சோ்ந்தவா் பாப்பாம்மாள் (60). இவா், தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக பழைய ரயில்வே காலனி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவா் பின்னால் வந்த இளைஞா் ஒருவா், மூதாட்டி அணிந்திருந்த நாலேகால் பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.
மூதாட்டியின் அலறல் கேட்டு, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் பாஸ்கரன், இளைஞரை விரட்டிச் சென்றுபிடித்தாா். விசாரணையில், அவா் விருதுநகா் நீராவி தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாா் (31) என்பது தெரியவந்தது. தனக்கு ரூ. 2 லட்சம் கடன் இருந்ததால், வேறு வழியின்றி நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞா் தெரிவித்துள்ளாா். வினோத்குமாரிடமிருந்து நகையை கைப்பற்றிய போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

