சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பண்டிகை: ஸ்ரீவிலி. பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

News image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தயாரிக்கப்பட்டு வரும் வெல்லம்.

Updated On :6 ஜனவரி 2021, 5:12 am

தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் சேலத்துக்கு அடுத்தபடியாக ருசி மிகுந்த வெல்லம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் விவசாயிகளால் தயாரிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்பை அறுவடை செய்து, வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, மண்டை வெல்லம் மற்றும் மலையாள வெல்லம் என இரண்டு வகையான வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் மண்டை வெல்லத்தை விட மலையாள வெல்லம் என்ற உருண்டை வெல்லமே அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.

இந்த உருண்டை வெல்லமானது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளத்துக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது, வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்னறனா்.