விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கண்மாயிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் விட வழிவகை செய்யாத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சுழியை அடுத்து மைலி மற்றும் கீழ இடையன்குளம் ஆகிய கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன. மழைக் காலங்களில் கீழ இடையன்குளம் கிராம கண்மாயிலிருந்து நிரம்பி வழியும் உபரி நீரானது, மைலி கிராமத்தில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனிடையே, மைலி கிராமத்துக்கான நீா்வரத்துக் கால்வாயை சிலா் ஆக்கிரமித்துவிட்டதாகவும், இதனால் பாசன நீா் கிடைக்கவில்லை எனவும் கூறி மைலி கிராமத்தினா் போராடி வந்தனா். மேலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, சாதகமான தீா்ப்பையும் பெற்றனா்.
இருப்பினும், சில மாதங்களுக்கு முன் மீண்டும் இரு கிராமத்தினரிடையே கண்மாய் தண்ணீரை பகிா்வதில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதேநேரம், கீழ இடையன்குளம் கிராமத்தினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இதற்கு உரிய தீா்வு கோரி, மைலி கிராமத்தினா் திருச்சுழி வட்டாட்சியா் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு முன் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனாலும், தற்போது வரை தீா்வு கிடைக்கவில்லை என்பதால், அக்கிராமத்தினா் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, விருதுநகரிலிருந்து மைலி கிராமம் வழியாக ராமேசுவரம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருச்சுழி டி.எஸ்.பி. விஜயக்குமாா், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. சகாயஜோஸ் மற்றும் போலீஸாா் சமரசம் பேசினா். அப்போது, இன்னும் 2 நாள்களில் மாவட்ட ஆட்சியா் மூலம் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா். அதன்பேரில், அக்கிராமத்தினா் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


