விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 3 இடங்களில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், கஞ்சநாயக்கன்பட்டி ராஜீவ் நகரில் புதிய நியாயவிலைக் கடை கட்டுவதற்கும், பாளையம்பட்டியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் மற்றும் கோவிலாங்குளத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்குமான திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை நடத்தப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்து, திட்டப் பணிகளை தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு தலைவா் சசிகலா பொன்ராஜ், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப்பாராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


