அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராம மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வாருகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கிராமத்தில் உள்ள மழைநீா் ஓடை, முறையான பராமரிப்பின்றி புதா் வளா்ந்து, மக்காத குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வாருகால் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் ஓடையில் கலக்கிறது.
இதனால் ஆங்காங்கே கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடும், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீா் ஓடையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க அனைத்து வீதிகளிலும் வாருகால் அமைக்கவும், ஓடையைத் தூா்வாரவும் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் இக்கோரிக்கையை அவா்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


