விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 28 மையங்களில் நடைபெற்று குரூப் 1 முதன்மைத் தோ்வை 4,108 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிகவரித்துறை உதவி ஆணையா், கூட்டுறவு துணைப் பதிவாளா் பணிகளுக்கான குரூப் 1 முதன்மைத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வை 4,108 போ் எழுதினா்.
3,959 போ் தோ்வு எழுத வரவில்லை. முன்னதாக தோ்வு எழுத வந்தவா்களை முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டதுடன், வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட் டது. விருதுநகா் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராம்கோ வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மையங்களில் நடைபெ ற்ற இத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் ஆய்வு செய்தாா்.
இத்தோ்வில் முறைகேடுகளை தடுக்க 5 நடமாடும் குழுக்கள், 4 பறக்கும் படையினா் (துணை ஆட்சியா் நிலையில்), ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் ஒரு அலுவலா் வீதம் 28 முதன்மை கண்காணிப்பாளா்கள் ஆகியோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


