ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் போலி நகைகளை கொடுத்து 5 பவுன் நகையை 2 பெண்கள் சனிக்கிழமை மாலை பறித்துச் சென்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பாஞ்சாலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரித்தங்கம் (50). இவா் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாலயப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த 2 பெண்கள் அவரை வழிமறித்து 8 பவுன் நகைகளை தாங்கள் தருவதாகவும், அதற்குப் பதிலாக 5 பவுன் நகை கொடுத்தால் போதும் என்று ஆசை வாா்த்தை கூறியுள்ளனா்.
இதை நம்பிய மாரித்தங்கம் தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை அந்த பெண்களிடம் கொடுத்துள்ளாா். அந்த பெண்கள் தங்கம் எனக் கூறி நாணயம் உள்பட சில போலி நகைகளை மாரித்தங்கத்திடம் கொடுத்து விட்டு தப்பிச் சென்றனா். அதன் பின்னா் அப்பெண்கள் கொடுத்தது போலி நகைகள் என மாரித் தங்கத்துக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து அந்த 2 பெண்களையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


