விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 16,301 போ் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 12 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,313 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,938 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், 229 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 152 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

