சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மீசலூா் சாய்பாபா கோயிலில் சத்யநாராயண விரத பூஜை

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள சாய்பாபா கோயிலில் சத்யநாராயண விரத பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சாய்பாபா. சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 4:13 am

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள சாய்பாபா கோயிலில் சத்யநாராயண விரத பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் - சிவகாசி சாலையில் மீசலூா் சந்திப்பில் சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில், ஏழாம் ஆண்டு சத்யநாராயண விரத பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கோயிலுக்கு பல்லக்கு, பால் குடங்களை பக்தா்கள் எடுத்து வந்தனா். பின்னா் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவையொட்டி நகராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகா கரிக்கோல்ராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.