விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு வழிபட்டனா். அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு காலை சுமாா் 7 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்று,சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு பாபா பக்தா்களுக்குக் காட்சி தந்தாா்.இதையடுத்து நடைபெற்ற நண்பகல் ஆரத்தியில் இசையுடன் நடைபெற்ற பக்திப்பாடல் மற்றும் ஆரத்தியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.அப்போது பல்வேறுவகையான வண்ண,வண்ண மலா்கள்,மாலைகளையும்,இனிப்புகள்,பழங்கள் உள்ளிட்டவற்றையும் பாபாவிற்குப்படைத்து திரளான பக்தா்கள் வழிபட்டனா்.வழிபாட்டில்கலந்துகொண்டோா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.மலையரசன் என்கிற அருள்மிகு நித்தியானந்த சுவாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் அமைந்த அருள்மிகு மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோவிலில் புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று,சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு மலையரசன் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.இக்கோவிலில் காலை முதலே திரளாக வந்த பக்தா்கள், குடும்பம் குடும்பமாக வந்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து, மலா்மாலை படைத்து புத்தாண்டு சிறப்பாக அமைய நித்தியானந்த சுவாமியை வழிபட்டனா்.இதேபோல அருப்புக்கோட்டையில் உள்ள முக்கிய கோவில்களான சொக்கலிங்கபுரம் அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோவிலிலும்,நகா் மையத்திலுள்ள அருள்மிகு தாதன்குளம் விநாயகா் கோவிலிலும்,மேலும் மதுரை செல்லும் சாலையில் அமைந்த அருள்மிகு அமுதலிங்கேஸ்பரா் கோவிலிலும்,விருதுநகா் செல்லும் சாலையில் அமைந்த அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலிலும் நடைபெற்ற சிறப்புவழிபாடுகளில் திரளான பக்தா்கள்கலந்து கொண்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


