சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:24 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இக் கிராமத்தில் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்துவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

  அவர் சம்பந்தப்பட்ட கிராமத்தை அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்து கழிவு நீர் கால்வாய், ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்க உத்தரவிட்டார். இதன் பேரில் இப் பணிகளை தொடங்க பூமி பூஜை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், பொறியாளர்கள் சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  மேலும் இடைய பொட்டல்பட்டி கிராமத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.