சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விருதுநகர் அருகே இலவச பொது மருத்துவ முகாம்

மங்கலம் ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி கிராம சமுதாயக் கூடத்தில் நடந்த  முகாமிற்கு ஊராட்சி தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரி முன்னிலை வகித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்

Updated On :1 ஜூன் 2013, 10:21 pm

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மேட்டுப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது.

மங்கலம் ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி கிராம சமுதாயக் கூடத்தில் நடந்த  முகாமிற்கு ஊராட்சி தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரி முன்னிலை வகித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறில் ஆகியவைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், மீனாட்சி மிஷன் மருத்துவக்குழுவினர் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரையில் மொத்தம் 115 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாடுகளை வழிவிடு முருகன் கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் சொர்ணம்மாள் அறக்கட்டளையின் மகளிர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.