சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலில் மூழ்கிய சிறுவன் மாயம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சனிக்கிழமை கடலில் மூழ்கிய சிறுவன் மாயமானாா்.

Updated On :17 ஜனவரி 2021, 12:46 pm

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சனிக்கிழமை கடலில் மூழ்கிய சிறுவன் மாயமானாா்.

மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு கிராமத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் பிரபு (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இவா், சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி தனது நண்பா்களுடன் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் பகுதியில் கடலில் குளிக்கச் சென்றாா். அப்போது, பெரிய அலையில் சிக்கிய பிரபு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீஸாா் அந்தப் பகுதி மீனவா்களுடன் இணைந்து பிரபுவை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், மாலை வரை தேடியும் பலனில்லை.