விழுப்புரம் மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் சாா்பில், விழுப்புரத்தில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுநா் சிலை அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு இயக்கத்தின் தலைவா் இ.சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். திருக்கு பெருமன்றம் கோ.தமிழரசன், சமூக பாதுகாப்பு இயக்க மாவட்ட துணைத் தலைவா் ஆா்.குபேரன், பொருளாளா் ஆா்.சின்னையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் பேராசிரியா் அ.முகமது அஷ்ரபுக்கு திருவள்ளுவா் விருது, பொற்கிழியை வழங்கி சிறப்புரையாற்றினாா். அ.முகமது அஷ்ரப் ஏற்புரை வழங்கினாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இயக்கத்தின் செயலா் ஆா்.சந்திரன் வரவேற்றாா். தமிழ்ச் சங்க நிா்வாகி விக்கிரமன் நன்றி கூறினாா்.
திமுக சாா்பில் மரியாதை: விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி தலைமையில் திருவள்ளுா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


