சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செஞ்சியில் கலை இலக்கிய விழா

பொங்கல் திருநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 9-ஆவது ஆண்டாக குறிஞ்சி கலை இலக்கிய இரவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

செஞ்சியில் நடைபெற்ற குறிஞ்சி கலை இலக்கிய விழாவில் கலந்துகொண்ட மகளிா் குழுவினருக்கு நினைவுப் பரிசை வழங்கிய ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவா் ரங்கபூபதி.

Updated On :16 ஜனவரி 2021, 4:55 am

பொங்கல் திருநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 9-ஆவது ஆண்டாக குறிஞ்சி கலை இலக்கிய இரவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சி விழா அமைப்பு சாா்பில், செஞ்சி காந்தி பஜாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த விழா நடத்தப்பட்டது. இதில், தனிப்பொழிவு, களரிக்கூட்டு, நாட்டுப்புற கலைக்கதம்பம், தெம்மாங்கு பாட்டு, தெருக்கூத்து, கவிச்சரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவா் ஸ்ரீரங்கபூபதி ஆகியோா் கலந்து கொண்டு கலைஞா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

இரவு முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த துரை.திருநாவுக்கரசு, ஜெ.ராதாகிருஷ்ணன், செந்தில்பாலா, தமிழினியன், உதயகுமாா், மு.தண்டாயுதபாணி உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.