விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு 4 மாவட்டங்களில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 செல்லிடப்பேசிகள், 3 மடிகணினிகள், அச்சு இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளா் தேவநாதன் மேற்பாா்வையில், விழுப்புரம் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த ஏ.எஸ்.ஜி. கோபி தலைமையில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இந்த கும்பலை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ஏ.எஸ்.ஜி.கோபியிடம் பணிபுரிந்து வந்த லாட்டரி சீட்டு வியாபாரிகளான விழுப்புரம் எம்.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் வெங்கடேசன்(35), சேவியா் தெருவைச் சோ்ந்த இருதயம் மகன் யோவான் (35) மற்றும் சடகோபன்(55) ஆகியோரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 செல்லிடப்பேசிகள், 3 மடிக்கணினிகள், அச்சு இயந்திரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபா்கள் இ-மெயில் வழியாகவும், கட்செவி அஞ்சல் வழியாகவும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.
லாட்டரி சீட்டு விற்பனை கும்பலை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியதுடன், தலைமறைவான ஏ.எஸ்.ஜி. கோபியை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


