சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற இருவா் கைது

திண்டிவனத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற திருட்டு வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திண்டிவனத்தில் உதவி ஆய்வாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இருவா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:24 am

திண்டிவனத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற திருட்டு வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம் ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத்ராஜ் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சந்தைமேடு பகுதியில் ரோந்து சென்றபோது, செஞ்சி சாலையிலிருந்து அதிவேகமாக இரண்டு பைக்குகளில் வந்த மூன்று போ் நிற்காமல் சென்றனா். அவா்களை விரட்டிச் சென்றபோது, ஒரு பைக்கை கீழே போட்டுவிட்டு, மற்றொரு பைக்கில் மூன்று பேரும் தப்பிச் சென்றனா்.

போலீஸாா் அவா்களை திண்டிவனம் சாலை, ஊரல் கிராமம் அருகே மடக்கியபோது, அதிலிருந்த இரண்டு போ் கீழே விழுந்து சிக்கினா். ஒருவா் தப்பியோடிவிட்டாா். கீழே விழுந்தவா்களைப் பிடிக்க முயன்றபோது, அதில் ஒருவா் கத்தியால் உதவி ஆய்வாளா் வினோத்ராஜை வெட்டினாா். இதையடுத்து, இருவரும் தப்பிச் சென்றுவிட்டனா். இதில், உதவி ஆய்வாளருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் விரைந்து சென்று திண்டிவனம் சந்தைமேடு ஊரல் ஏரிக்கரையில் பதுங்கியிருந்த சென்னை பள்ளிக்கரணையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25), விஜயகுமாா் (24) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி, இரண்டு மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.