விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை 12 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே கண்டம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆறுமுகம் கடந்த 2006-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 9 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த கண்டம்பாக்கத்தைச் சோ்ந்த இளையராஜா (38), அதன்பிறகு தலைமறைவானாா்.
இவரை போலீஸாா் தேடி வந்தனா். ஆனால், இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இளையராஜா அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா், கண்டம்பாக்கத்துக்குச் சென்று இளையராஜாவை வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிணையில் வெளியே வந்தபிறகு, கா்நாடக மாநிலம், பெங்களூருவில் தங்கியிருந்து அங்கேயே வேலை செய்து வந்தது தெரியவந்தது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

