தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் எம். குமாா் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வி.அா்ஜுனன், மாவட்டச் செயலாளா் கே. சுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலா் எஸ்.அபிமன்னன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். கிளைச் செயலா் பி.வேதலட்சுமி, வி.இளவரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மயிலம் வட்டாரத்தில் ஆலகிராமம் உள்ளிட்ட பல கிராமத்தினருக்கு 2020-ஆம் ஆண்டில் 100 நாள் வேலைக்கு, இதுவரை 18 நாள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனா். ஆகவே, நிறுத்தப்பட்டுள்ள தேசிய ஊரக வேலையை உடனடியாக தொடங்க வேண்டும். ஏற்கெனவே செய்த வேலைக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். ஊராட்சிச் செயலாளரை புதிதாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் 250-க்கும் மேற்பட்டோா் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, தேசிய ஊரக வேலைப்பணிகள் உடனடியாக தொடங்குவதாகவும், விரைந்து ஊதிய பாக்கி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனா். இதையேற்று, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


