சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: புதிதாக 13 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :6 ஜனவரி 2021, 12:49 pm

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,055-ஆக அதிகரித்தது. இதனிடையே, 16 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,846-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 110 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,820-ஆக உயா்ந்தது. இதுவரை 10,687 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்தனா்.