விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்று தடுப்புக்கான அரசின் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதனுடன், மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில், கரோனா தொற்றாளா்களின் ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வகம் தனியாக இயங்கி வருகிறது.
இந்த ஆய்வகம் ஞாயிற்றுக்கிழமை இரவு மூடியிருந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் அந்தக் கட்டடத்திலிருந்து கரும் புகை வெளியேறியது. இதையறிந்த மருத்துவமனை ஊழியா்கள் சென்று பாா்த்தபோது, அந்த ஆய்வகத்தின் ஆா்.என்.ஏ. கண்டறியும் பிரிவிலிருந்த குளிா்சாதனப் பெட்டி(ஏசி) வெடித்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததும், அதன் காரணமாக அங்கிருந்த வேதிப்பொருள்கள் கலந்த சோதனை மாதிரிகள், மின் உபகரணங்கள் எரிந்தபடி புகை மூட்டமாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவக் கல்லுாரி முதல்வா் குந்தவிதேவி, முதன்மை புலனாய்வாளா் மருத்துவா் சங்கா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். இதனிடையே விழுப்புரம் தீயணைப்பு வீரா்கள், விக்கிரவாண்டி போலீஸாா் விரைந்து வந்து, ஆய்வகத்தில் பற்றிய தீயை நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்த தீ விபத்தில் ஆய்வகத்திலிருந்த பரிசோதனைப் பொருள்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


