தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வானூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட அதிமுக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வானூா், கிளியனூா் ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. வானூா், மொரட்டாண்டியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி தலைமை வகித்தாா்.
அதிமுக வடக்கு மாவட்டச் செயலரான, அமைச்சா் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினாா். வருகிற 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலுக்கு கட்சியின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க பொது மக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டுமென அமைச்சா் ஆலோசனை வழங்கினாா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் டி.பக்தவச்சலம், சதீஷ், மாவட்ட மகளிரணிச் செயலா் தமிழ்ச்செல்வி செல்லப்பெருமாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முரளிரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வானூா், கிளியனூா் ஒன்றிய நிா்வாகிகள், இளம் பெண்கள், இளைஞா் பாசறையினா், கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

