முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில், நல்லிணக்க உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்தார். அவர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிருந்தாதேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ரா.பிரியா, நாகராஜன், ராஜேந்திரன், சேதுராமன், தேர்தல் வட்டாட்சியர் ப.நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி, ஆக.21: கள்ளக்குறிச்சியில் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜி.கே.மூப்பனார், சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்தி ஆகியோரது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
÷கச்சேரி சாலையில் உள்ள நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ந.தனபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தே.ரமேஷ் முன்னிலை வகித்தார். கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
வட்டாரத் தலைவர் பி.பி.எஸ்.இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் த.திருப்பதிராஜ் நன்றி கூறினார்.
திருக்கோவிலூர், ஆக. 21: திருக்கோவிலூர் பகுதியில், பல்வேறு இடங்களில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாசில்தார் து.துளசிபாய் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தலைமையில் அலுவலர்கள் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் பன்னீர்செல்வம், உதவியாளர் வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ்: திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் காங்கிரஸ் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ரிஷிவந்தியம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சிவராஜ், ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலர் வழக்குரைஞர் லட்சுமிகுமார், வட்டாரத் தலைவர் கே.வி.முருகன், நகரத் தலைவர் சரவணன், நகர இளைஞரணித் தலைவர் வாசு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜி.ரவிக்குமார், ஆர்.சி.கே.மோகன், ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் சார்பில் பகண்டை கூட்ரோட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டாரத் தலைவர் ஆர்.சத்தியமூர்த்தி ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

