அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி, கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கச்சராயப்பாளையம் சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளி முன்பு, இப் பேரணியை ஒன்றியக்குழுத் தலைவர் அ.ராஜசேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.அன்புச்செல்வம், ஆசிரியப் பயிற்றுனர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
காந்திசாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில், 6 வயது முதல் 14 வயதுவரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், வீட்டில் பயிற்சி பெறும் மாணவர்கள், பகல் நேர பாதுகாப்பு மையத்தில் பயிலும் மாணவர்கள், பள்ளிகளில் சேராதோர் மற்றும் இடைநின்றோரை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து தேவைப்படுவோருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் 04151-228254 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

