சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களில் கிளைத் தேர்தல் மற்றும் உறுப்பினர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:57 pm

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களில் கிளைத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

  ஒன்றிய அமைப்பாளர் இரா.இளையராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர அமைப்பாளர் நா.இராஜேஷ் வரவேற்றார்.

  பால்ராம்பட்டு, கரடிசித்தூர், வேளாக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக

இணைந்தனர்.

  கிளைத் தேர்தலில் தியாகதுருகம் பகுதிக்கு எஸ்.சி. அணியின் மாவட்டத் தலைவர் இ.சங்கரசுப்பிரமணி, கள்ளக்குறிச்சி பகுதிக்கு வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்  இரா.ராஜ்பிரசன்னா ஒன்றிய தேர்தல் அதிகாரியாக செயல்பட்டனர்.

 மாவட்ட அவை செயலாளர் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணன், வைத்தியநாதன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். வி.தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.