சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:50 pm

சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதி, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் வந்தது.

 இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு சென்னை, ராயப்பேட்டையில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடைபெறுகிறது. இம் மாநாட்டுக்காக கும்பகோணத்தில் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவாக ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

 இந்த ஜோதியை கடந்த 18-ஆம் தேதி மத்தியக் குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் கும்பகோணத்தில் எடுத்துக் கொண்டு கிளம்பினர். இந்த ஜோதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி வழியாக விழுப்புரத்தை வந்தடைந்தது.

 விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே இந்த ஜோதிக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குருமூர்த்தி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், இந்திய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.