செஞ்சியில் 10 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், தலைவர் செஞ்சி மஸ்தான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயலர் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மன்றத்தின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் என 20 மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அன்புச்செழியன் (திமுக): 1-வது வார்டில் குடிநீர் 10 நாளைக்கு ஒருமுறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தலைவர்: புதிய குடிநீர்த் திட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பணிகள் முடிந்து அத்திட்டம் பேரூராட்சியிடம் ஒப்படைத்தவுடன் குடிநீர் விநியோகம் சீராகிவிடும்.
(அப்போது குடிநீர் விநியோகம் சரியில்லை என பெரும்பாலான கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.)
பன்னீர்செல்வம் (அதிமுக): 8-வது வார்டில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
சின்னையா வீரப்பன் (அதிமுக): 14-வது வார்டில் சாலை மற்றும் குடி நீர், கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை.
தலைவர்: விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்.
சின்னையா வீரப்பன்:பொது நிதியில் இருந்து ஏன் டெண்டர் வைக்கவில்லை.
அனுசுயா (அதிமுக): 6-வது வார்டில் வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை மனு அளித்தும் பயனில்லை.
தலைவர்: டெண்டருக்கு தடை ஏற்படுத்துவது நீங்கள் (அதிமுக)தான்.
நாகராஜ் (அதிமுக): நாங்கள் தடையாக இல்லை. பிரச்சினை செய்கிறார்கள் என காரணம் காட்டி எந்த டெண்டரையுமே விடாமல் உள்ளீர்கள். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.
தலைவர்: பொது நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

