சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு

Updated On :2 மே 2013, 5:51 pm

உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில், செவ்வாய்க்கிழமை நெய்வேலி ஸ்கியூபாலத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிமூப்புப் பட்டியல் அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, என்எல்சி இன்கோ-சர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில், தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 ஆயிரத்து 300 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி, என்எல்சி இன்கோ-சர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கம் தலைமையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் என்எல்சி நிர்வாகத்தை வியாழக்கிழமை சந்தித்து கடிதம் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, என்எல்சி இன்கோ-சர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். தொமுச, அதொஊச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்டத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.