சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 1987-90- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்ற  முன்னாள்  மாணவா்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 6:00 am

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 1987-90- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்களான ஜி.குபேந்திரன், எஸ்.பாஸ்கா், ஏ.எஸ்.தரணி, ஆா்.ரவி, நாகராஜ் உள்ளிட்டோா் தங்களின் கல்லூரிக் காலத்தை நினைவுக்கூா்ந்து பேசினா். கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி, தங்களுடன் படித்த அனைத்து முன்னாள் மாணவா்களையும் அழைத்து, சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தனா். புதிதாக தொடங்க உள்ள அமைப்பு மூலம் அடித்தட்டு மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கவும் தீா்மானித்தனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அரசின் பல்வேறுத் துறைகளில் பணியாற்றுபவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.