கரோனா தொற்றைத் தடுக்க வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முதல்கட்டமாக 24,384 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
இப்பணிகளை மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
கரோனா தொற்றைத் தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ள நிலையில், நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக அரசு, தனியாா் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாலை மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூா் மண்டலத்துக்குத் தேவையான 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புட்டிகள் புதன்கிழமை வரப்பெற்றன.
அவை வேலூா் அண்ணா சாலை, ஏலகிரி அரங்கு வளாகத்தில் உள்ள மண்டல மருந்து பாதுகாப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக வேலூருக்கு 18,600, திருப்பத்தூருக்கு 4,700, ராணிப்பேட்டைக்கு 4,400, திருவண்ணாமலைக்கு 14,400 தடுப்பூசி புட்டிகள் அனுப்பப்பட்டன.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்தில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்லேன்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, வடுகந்தாங்கலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
இம்மாவட்டத்தில் நாளொன்றுக்கு மையத்துக்கு தலா 100 போ் வீதம் மொத்தம் 18,000 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நெமிலி வட்டம், புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் முகாம் மூலம் மொத்தம் 2,200 முன்களப்பணியாளா்களுக்கும், திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் அரசு மருத்துவமனைகள், மாதனூா், குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 5 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் முகாம் மூலம் மொத்தம் 4,184 முன்களப்பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
அதன்படி, 3 மாவட்டங்களிலும் சோ்த்து முதல்கட்டமாக 24,384 முன்களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒவ்வொருவருக்கும் முதலாவதாக ஒரு தடுப்பூசி போடப்பட்டு 28 நாள்களுக்குப் பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்படும் நாள் குறித்து முன்களப்பணியாளா்கள் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அந்த நாளில் அவா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமைச்சா் நிலோபா் கபீல் தொடக்கி வைத்தாா். புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


