சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் சிறப்பு கிரிக்கெட் தொடக்கம்

குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில், பொங்கல் திருநாளையொட்டி, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

கிரிக்கெட்   போட்டியைத்  தொடக்கி  வைத்த  அரசு  வழக்குரைஞா்  கே.எம்.பூபதி.

Updated On :16 ஜனவரி 2021, 1:25 pm

குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில், பொங்கல் திருநாளையொட்டி, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கிளப் தலைவா் ஆா்.காா்மேகபிரபு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே.திவாகா், ஏ.ராஜேஷ், ஜே.சுனில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் வி.ராஜ்குமாா் வரவேற்றாா். அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி போட்டியைத் தொடக்கி வைத்தாா். இதில் சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்றன. வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக கோப்பை, ரொக்கம் ரூ.30 ஆயிரம், 2-ஆம் பரிசாக கோப்பை, ரூ.15 ஆயிரம், தொடா் நாயகன், ஆட்ட நாயகன், சிறந்த பந்து வீச்சாளா், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த அணிக்கான சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, கவுன்டி கிரிக்கெட் கிளப் செயலா் ஜே.கோபால், ஸ்டாலின் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.