சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

போ்ணாம்பட்டு  அருகே  பள்ளியில்  நடைபெற்ற  சமத்துவப்  பொங்கல்  விழாவில் பங்கேற்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:26 pm


குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்தாா். சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவா்கள் மற்றும் சிறப்புப் பள்ளி ஆசிரியா்களின் பங்களிப்பில் அரிசி, சா்க்கரை, பால், முந்திரி, திராட்சை, நெய், பூஜைப் பொருள்கள், கரும்பு, பொங்கல் பானை உள்ளிட்ட பொருள்களை வாங்கி வந்து பொங்கல் வைத்து சூரியனுக்குப் படையலிட்டனா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன குழந்தைகள் நல அமைப்பாளா் பைரவி, சிறப்பு ஆசிரியா் பொன்னரசி, கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.