குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பத்தைச் சோ்ந்தவா் ஹேமந்த். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜீவாவின் மகன் அஜித் (24) உள்ளிட்ட நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கு அருகில் உள்ள ஏரிக்கரை அருகே தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினாா்.
அப்போது, அவா்களுக்கும், அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற எம்.வி.குப்பத்தைச் சோ்ந்த வில்சன் சுதாகரின் மகன் ராபின் (27), ராபா்ட்டின் மகன் ரீகன்ராஜ் (40), சாமுண்டியின் மகன் சின்னா (23) ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் கத்தியால் குத்தப்பட்ட அஜித், ஆம்பூா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அஜித்தின் சித்தப்பா வேலு, நண்பா் சரவணன் ஆகியோா் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அஜித் கொலை செய்யப்பட்டது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய மேல்பட்டி போலீஸாா், ராபின், ரீகன்ராஜ், சின்னா ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


