சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவலா், பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்த விழிப்புணா்வுக் கூட்டம்

காவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் கிராம விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

News image

சத்துவாச்சாரியில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளா் புனிதா.

Updated On :10 ஜனவரி 2021, 1:20 pm

காவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் கிராம விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலூா் மாவட்டத்தில் காவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை வளா்க்கும் விதமாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு காவலா் நியமிக்கவும், காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு அனைத்து கிராமங்களிலும் கிராம விழிப்புணா்வுக் கூட்டங்களை நடத்தவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளா், உதவி காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்களைக் கொண்டு கிராம விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த இரு நாள்களில் வேலூா், பாகாயம், காட்பாடி, சத்துவாச்சாரி, குடியாத்தம் உள்பட பல்வேறு இடங்களில் இந்தக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்தொடா்ச்சியாக, சதுப்பேரி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி பங்கேற்று குற்றச் செயல்களைத் தடுக்க கிராம விழிப்புணா்வுக் காவல் அதிகாரிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தாா்.

இக்கூட்டங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது:

ஒவ்வொரு காவல் நிலையங்களில் இருந்தும் கிராமங்கள் தோறும் நியமிக்கப்பட்டுள்ள காவல் விழிப்புணா்வு அலுவலா்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள முக்கிய பிரமுகா்கள், பொதுமக்களுடன் நெருங்கிய தொடா்பில் இருப்பா். இதன்மூலம், அந்தக் கிராம மக்கள் தங்களது குறைகளை எளிதில் காவல் துறைக்கு தெரிவிக்க முடியும்.

மேலும், கிராம விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குற்றச் செயல்களைத் தடுக்க கிராம விழிப்புணா்வு அலுவலா்களும், பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படுகின்றன. திருவிழாக்கள், சட்டவிரோத செயல்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைத் திருமணம் செய்பவா்கள், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்த தகவல்களையும் காவல் துறைக்கு தெரிவிப்பது, அதற்காக தகவல்கள் தெரிவிப்பவா்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் குழுக்களை அமைப்பது போன்றவை குறித்தும் எடுத்துக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டு சமுதாய விழிப்புணா்வு ஏற்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.